உள்நாடு

பால் தேநீரின் விலை ரூ.10 ஆல் அதிகரிப்பு

பால்மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று (31) நள்ளிரவு முதல் ரூ.10 ஆல் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

பால்மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் தேநீர், பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து வகையான பழச்சாறுகளின் ஒரு கோப்பையின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ.10 ஆல் அதிகரிக்கப்படும்.

இது தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீஸ், உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்களின் விலையும் ரூ.10 உயர்த்தப்படும் என்று சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

தவறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மேலும் 79 பேர் குணமடைந்தனர்

இலங்கை ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு