உள்நாடு

பால்மா விலை அதிகரிப்பு : நாளை உத்தியோகபூர்வ அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மாவின் விலையை ரூ.300 இனால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து முடிவொன்றினை எட்டியுள்ளது.

இதன்படி, 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை ரூ.120 இனால் அதிகரிக்கப்படும் எனவும் விலை அதிகரிப்பு தொடர்பில் நாளைய தினம் அறிவிக்கப்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5,500 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் உள்ளூர் சந்தையில் பால் மாவின் விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிடவுள்ளதாகவும் பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 50 பேர் பூரண குணமடைந்தனர்

ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த தடை!

கொழும்பில் முச்சக்கரவண்டியினுள் இருந்து சடலம் ஒன்று மீட்பு