உலகம்உள்நாடுவிளையாட்டு

பாலியல் வழக்கில் சிக்கிய தனுஷ்கவுக்கு எதிரான பிணை தளர்வு!

(UTV | கொழும்பு) –

அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகள் சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தினால் இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து அவர் அவுஸ்திரேலியாவுக்குள் தடையின்றி பயணம் செய்ய முடியுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவுக்குச் பயணிக்கவும், அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, அவர் ஒரு மாதத்தில் 2 தடவைகள் அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் அவுஸ்திரேலியாவுக்குள் பயணிக்க விரும்பினால், அவர் பயணிக்கும் காலம், இடம், பாதை என்பனவற்றை குறைந்தது 48 மணித்தியாலங்களுக்கு முன்னரே பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு

editor

இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி