அரசியல்உள்நாடு

பாலித ரங்கே பண்டாரவின் கருத்து : அவ்வாறான தீர்மானம் கட்சிக்கு நல்லதல்ல – நவீன் திசாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் கருத்துக்கு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரும் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான நவீன் திசாநாயக்க எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

தேர்தல்களை ஒத்தி வைப்பது பொருத்தமற்றது எனவும் அவ்வாறான தீர்மானம் கட்சிக்கு நல்லதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்களை ஒத்தி வைத்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் கட்சிக்குள் பேசப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்த நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் என்பனவற்றை இரண்டாண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் கட்சியின் பொதுச் செயலளார் பாலித ரங்கே பண்டார வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நவீன் திசாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

 

Related posts

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம்

மின்சார கட்டணத்தை செலுத்த புதிய வழிகள் அறிமுகம்!

ரிஷாத் ஒருபோதும் தீவிரவாத்தில் ஈடுபடமாட்டார் – மங்கள