உலகம்சூடான செய்திகள் 1

பாலஸ்தீன ஆண்களை நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ள இஸ்ரேல் இராணுவத்தினர்!

(UTV | கொழும்பு) –

இரண்டு சிறுவர்கள் உட்படபாலஸ்தீன ஆண்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ளதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது. இரண்டுசிறுவர்கள் அரைநிர்வாணமாக்கப்பட்ட நிலையில் ஒருவரின் கரத்தை மற்றவர் பிடித்தபடி நடந்துசெல்வதை வீடியோ காண்பிப்பதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

அதேசிறுவர்கள் நிர்வாணமான நிலையில் கைகளை உயர்த்திபடி காணப்படுவதை குறிப்பிட்ட வீடியோ காண்பிப்பதாக தெரிவித்துள்ள சிஎன்என் ஏனையை ஆண்களும் அந்த படங்களில் கைகளை உயர்த்தியபடி காணப்படுவதாக தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ள சிஎன்என் எனினும் காசா நகரத்தில் உள்ள யார்முக் மைதானத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தனது ஜியோலொக்கேசன் காட்டுவதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தினரிடம் இது குறித்து கருத்தை பெற முயன்றதாகவும் அதுபலனளிக்கவில்லை எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக இஸ்ரேலிய படையினர் பல பாலஸ்தீனியர்களை சுற்றிவளைத்து கைதுசெய்துள்ளனர் அவர்களை இஸ்ரேலிய படையினர் நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ளனர்.
சமீபத்தைய வீடியோவில் ஆண்கள் அரைநிர்வாணமான காணப்படுகின்றனர் வீடியோவின் சில இடங்களில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் நிலத்தில் அமர்ந்துள்ளனர் – வேறு சிலர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கின்றனர் இஸ்ரேலிய படையினர் அவர்களை சோதனையிடுகின்றனர்.

பெண்கள் சிறுவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன, கால்பந்தாட்ட மைதானத்தில் முழுமையான ஆடையுடன் கண்கள்மூடப்பட்ட கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண்கள் மூவர் காணப்படுகின்றனர் மைதானத்தில் இஸ்ரேலிய கொடியை காணமுடிகின்றது. அந்த மைதானத்தில் இராணுவ வாகனங்களையும் புல்டோசர்களையும் காணமுடிகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மஹிந்தானந்தவுக்கு எதிராக விஷேட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?

களுத்துறை மாவட்டத்தில் 10 மணி நேர நீர்வெட்டு