வணிகம்

பாற்பண்ணை விவசாயின் பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –முன்னணி உள்நாட்டு பாற்பண்ணை உற்பத்தியாளரான Pelwatte Dairy Industries Ltd, நிறுவனத்தின் பாற்பண்ணை சேவைகள் மற்றும் விரிவாக்க களக் குழுவினால் அளிக்கப்படும் பல சமூக-பொருளாதார ரீதியான வலுவூட்டும் நடவடிக்கைகள் மூலமாக, உள்நாட்டு பாற்பண்ணை விவசாயிகள் மற்றும் சிறு பண்ணை உரிமையாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

Pelwatte Dairy Industries நிறுவனமானது நாடுபூராகவும் உள்ள தனது பால் சேகரிப்பு நிலையங்கள் ஊடாக பாற்பண்ணை விவசாயிகளுக்கு போட்டித்தன்மையான விலையை வழங்குவதன் மூலம் அவர்களது சமூக – பொருளாதார நிலையை மேம்படுத்தும் முயற்சிகளை எடுத்துள்ளது.

“பல பாற்பண்ணை உற்பத்தி நிறுவனங்கள் மழைக்காலங்களில் குறைவான யோகட் விற்பனையைக் கருத்தில் கொண்டு பால் கொள்வனவை மேற்கொள்ளாத போதிலும் Pelwatte Dairy Industries நிறுவனம், காலநிலையை கருத்தில் கொள்ளாமல், பாற்பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை முக்கியமாகக் கொண்டு, தொடர்ச்சியாக பால் கொள்வனவில் ஈடுபடுகின்றது,” என Pelwatte Dairy Industries நிறுவனத்தின் தலைவர், ஆரியசீல விக்ரமநாயக்க தெரிவிக்கின்றார்.

தற்போது, இந்த பாரிய பாற்பண்ணை நிறுவனமானது சுமார் 10,000 இற்கும் அதிகமான பாற்பண்ணை விவசாயிகளிடமிருந்து பாலை கொள்வனவு செய்வதுடன்,  இந்த வலையமைப்பு தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்றது. Pelwatte Dairy Industries, உள்நாட்டு பாற்பண்ணை துறையை ஊக்குவிப்பதனையும், பாற்பண்ணை விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்குவதையும் உறுதிப்படுத்துகிறது.

பாற்பண்ணை விவசாயிகளுக்கு பாற்பண்ணை செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி மற்றும் அறிவுப் பரிமாற்றல்  Pelwatte Dairy Industries நிறுவனத்தின் முயற்சிகளில் ஒரு முக்கிய அம்சமாகும். தீவன புல் பயிர்ச்செய்கை மற்றும் தீவனங்கள்  தொடர்பான அறிவூட்டல்  இதில் அடங்கும். பால் கறக்கும் பசுக்களுக்கு ஒரு சீரான உயர் போஷணை கொண்ட உணவை வழங்குவதில்,  இந்த காரணிகளைப் பற்றிய அறிவும் புரிதலும் அவசியம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இது பசுவிலிருந்து கறக்கப்படும் பாலின் அளவை மேம்படுத்துவதுடன், உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும்.

“இனப்பெருக்கம், பால் கறத்தல், கால்நடை வளர்ப்பு போன்றவை அடங்கலாக, நவீன பால் பண்ணைத் தொழிலின் சிறந்த மற்றும் நவீன நடைமுறைகளை உள்நாட்டு விவசாயிகளுக்கு கொண்டுசெல்லும் முழு செயல்முறையின் ஊடான எங்கள் நோக்கம்; குறைந்த உற்பத்தி செலவுகள், மேம்பட்ட உற்பத்தித்திறன் ஆகியவற்றுடன் மற்றும் முதலீட்டிலிருந்தான வருமானத்தின் பிரதிகூலங்களை விவசாயிகளுக்கு வழங்குதலாகும்.

எளிமையாக கூறுவதெனில்,  உள்ளூர் பால் தொழில்துறையின் முன்னோடிகள் என்ற வகையில் எமது முதன்மை நோக்கம், உள்ளூர் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட  சேவை செய்வதாகும்,” என உள்ளூர் பாற்பண்ணை விவசாயிகளின் சமூக-பொருளாதார தரத்தை மேம்படுத்தும், Pelwatte Dairy Industries நிறுவனத்தின் முயற்சி தொடர்பில் விளக்கமளிக்கையில், விக்ரமநாயக்க குறிப்பிட்டார்.

விக்ரமநாயக்க மேலும் கருத்து வெளியிடுகையில், “நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையானது நிதி ரீதியான வெகுமான சித்தாந்தங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள போதிலும் தேசத்திற்கு பிரதியுபகாரமாக சேவை செய்வதில் அதிகம் உள்ளது. நாங்கள் பாற்பண்ணை விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் அறிவு பகிர்வு ஆகியவற்றில் பணத்தை நோக்காகக் கொண்டு ஈடுபடவில்லை,  மாறாக இந்த தேவைகளை எங்கள் வருடாந்த வரவு, செலவுத் திட்டத்திலேயே உள்ளடக்குகின்றோம்”, என்றார்.

Pelwatte Dairy Industries, புத்தலவில் உள்ள தங்கள் பயிற்சி மற்றும் அபிவிருத்தி பண்ணையில் சீரான பயிற்சி முகாம்களை நடத்துகின்றது. உள்ளக பயிற்சியின் போது விவசாயிகளுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது.

எனவே, பாற்பண்ணை விவசாயிகள் சிறந்த பயிற்சி மற்றும் அறிவு பகிர்வு வாய்ப்புகளைப் பெற உதவும் முழு செயல்முறையையும் நிறுவனம் பொறுப்பேற்கிறது. தங்கள் வணிக மாதிரியானது பெரிய அளவிலான விவசாயிகளுக்கும், சிறு அளவிலான விவசாயிகளுக்கும் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிக்கின்றது என அந் நிறுவனம் உறுதியளிக்கிறது, எனவே 50 மாடுகளை வளர்க்கக்கூடியவர்களுக்கும், 2 முதல் 3 மாடுகளை வளர்ப்பவர்களுக்கும் வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புகளில் எந்த மாற்றமும் இல்லை.

இதுமட்டுமன்றி, Pelwatte Dairy Industries, பாற்பண்ணை விவசாயிகளுக்கு உயர்தர மற்றும் செறிவூட்டப்பட்ட தீவனங்களை வழங்குவதற்கும் வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. எனவே, Pelwatte Dairy Industries, சிறு மற்றும் விவசாயிகளின் பொருளாதாரங்களையும், உள்ளூர் பால் தொழில்துறையையும் வளமாக்கும் ஒரு நிலையான வணிக மாதிரியில் கவனம் செலுத்துகின்றது.

உள்ளூர் பாற்பண்ணை விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கான முயற்சியை வலுப்படுத்துவதற்காக Pelwatte Dairy Industries நிறுவனம் சமீபத்தில் ஹப்புதளை, அம்பகஸ்தோவ, மாஓய மற்றும் பதவியவில் 04 புதிய பால் சேகரிப்பு நிலையங்களைத் திறந்தது. இதுவரை, இந் நிறுவனம் நாடு முழுவதும் 40 பால் சேகரிப்பு நிலையங்களைக் கொண்டுள்ளது. பாற்பண்ணை விவசாயிகள் சேகரிக்கப்பட்ட பாலை தொந்தரவில்லாமல், சரியான நேரத்தில் ஒப்படைப்பதற்கு இந்த நிலையங்கள் வழி செய்கின்றன. இது தொலைதூர பகுதிகளான நுவரெலியா, ஹப்புதளை, ஹட்டன், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வட மேற்கு மாகாணம் போன்றவற்றில் மற்றும் பல விவசாயிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்வதற்கு உதவியுள்ளது.

 

Pelwatte Dairy Industries தொடர்பில்,

Pelwatte Dairy Industries Ltd, நாடு முழுவதும் சிறந்த தரமான பால் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகும்.  இத்துறையில் முக்கிய  சக்தியாக வளர்ந்து வரும் பொருட்டு இந்நிறுவனம் வேகமாக வளர்ந்து வருவதுடன், வளர்ச்சிக்கான பகுதிகளையும் அடையாளம் கண்டுள்ளது. Pelwatte Dairy Industries Ltd, சர்வதேச தரமான பால் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளது மற்றும் முதன்மையான Pelwatte வர்த்தக நாமம், எங்கள் வலிமை மற்றும் ஊக்கத்தின் ஆதாரமாக இருக்கும் வாடிக்கையாளர்களின் முழுமையான நம்பிக்கையை பெற்றுள்ளது.

Related posts

லீனா இஸ்பைரோ தனியார் நிறுவன நடவடிக்கைகள் ஆரம்பம்

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்காக புதிய இலத்திரனியல் அட்டை அறிமுகம்…

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சி இன்று ஆரம்பம்