விளையாட்டு

பார்வையாளர்களுக்கும் தடை

(UTV |  டோக்கியோ, ஜப்பான்) – டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் இரு வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் அனைத்து பார்வையாளர்களுக்கும் அமைப்பாளர்கள் தடை செய்துள்ளனர்.

அரசியல் அழுத்தம் மற்றும் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றுகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, வியாழக்கிழமை தலைநகருக்கு நான்காவது அவசரகால நிலையை அறிவித்த பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு, டோக்கியோ ஒலிம்பிக்கை பார்வையிடுவதற்கான ரசிகர்களின் இறுதி நம்பிக்கையை இல்லாது செய்தது.

ஜப்பானிய சுகாதார அமைச்சர் நோரிஹிசா தமுரா, விளையாட்டு வீரர்களுக்காக வருத்தப்படுவதாக தெரிவித்ததுடன், எனினும் இந்த முடிவு சரியானது என்றும் கூறினார்.

போட்டிகளை ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்திய ஊடக ஆய்வில், 35 சதவீதம் போர் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாது நடைபெற விருப்பம் கொண்டனர். 26 பேர் பார்வையாளர்கள் பங்கெடுக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டனர். 34 சதவீதம் பேர் விளையாட்டுகள் இரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று விரும்பினர்.

சில மாதங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடைவிதிக்கப்பட்டதுடன், உள்நாட்டு பார்வையாளர்களில் 50 சதவீதமானோருக்கு மாத்திரம் அனுமதி வழங்கியது.

Related posts

“கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்து” ரெய்னா ஓய்வு

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் ஒத்திவைப்பு