கிசு கிசு

பாரிய எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு மீளவும் ஹரின் தயார்

(UTV | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படாவிடில் பாரிய எதிர்க்கட்சிக் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் சிந்தித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி சஜித் பிரேமதாசவுக்கு அதனை வழங்காவிடில் இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார்,

ஆனால் தமது கூட்டணியில் உள்ளடங்கியுள்ள கட்சிகள் தொடர்பில் தற்போது பகிரங்கப்படுத்தப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியினால் தற்போது சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக பெயரிடப்பட்டுள்ளதுடன் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் கட்சித் தலைமைப் பதவி வழங்கப்படாவிட்டால் தாம் பிரதமர் வேட்பாளர் பதவியை ஏற்கப் போவதில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்தூக்கியில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மட்டு?

அத்தியாவசிய மருந்துகளை வாங்க 2.6 மில்லியனை டாக்டர். ஷாபி நன்கொடையாக அரசுக்கு வழங்கினார்

நியூஸ்லாந்து அணி பயணித்த பேருந்து: மலைப்பகுதியில் நடந்தது என்ன? (video)