உள்நாடு

பாராளுமன்ற ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சேவைப் பிரிவு ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(08) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அத்தியவசிய தேவையொன்றுக்காக, தான் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சேவைப் பிரிவுக்கு விஜயம் செய்தபோது, தன்னை அனுமதிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் இன்றைய பாராளுமன்ற அமர்வில் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், கொரோனா அச்ச நிலைமையை கருத்திற் கொண்டு, அங்கு பிரவேசிப்பதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனவா என பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்படி, குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே, பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சேவைப் பிரிவு ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

இந்நிலைமையை கருத்திற் கொண்டே, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்நுழைவதை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

நாளை முதல் பேரூந்து சேவைகள் மட்டு

தயார்படுத்தப்படும் பரீட்சை நிலையங்கள்!

மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி