சூடான செய்திகள் 1

பாராளுமன்ற மின் உயர்த்தி தொடர்பான விசாரணை அறிக்கைகள் இன்று பொதுச் செயலாளரிடம்

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர்கள் மின் உயர்த்தியில் சிக்குண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பான இரண்டு அறிக்கைகள் இன்று(13) பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மின்உயர்த்தி கட்டமைப்பை இயக்கும் நிறுவன அதிகாரிகள் மற்றும் பாராளுமன்றத்தின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் இணைந்து குறித்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு சபாநாயர்
பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

 

 

 

 

Related posts

கடந்த 25 நாட்களுக்குள் கொழும்பு மாவட்டத்தில் 2075 டெங்கு நோயாளர்கள் பதிவு

மதுபானசாலைகளுக்கு பூட்டு

கரையோர புகையிரத சேவைகள் வழமைக்கு