அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – 22 மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டி – 74 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

2024 பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டியிடப் போவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஏதேனும் அநீதிகள் இடம்பெற்றுள்ளதாக உணர்ந்தால் அந்த குழுக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான அரசியல் குழுக்கள் போட்டியிடுவதுடன், அதன் எண்ணிக்கை 64 ஆகும்.

மொனராகலை மற்றும் பொலன்னறுவை தேர்தல் மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான அணிகள் போட்டியிடுவதுடன், அங்கு தலா 15 அணிகள் போட்டியிடுகின்றன.

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.

எதிர்காலத்தில் விருப்பு வாக்கு இலக்கங்கள் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்

Related posts

சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டம்

துறைமுக அதிகாரசபை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்