அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – வன்னியில் சீலரத்தின தேரர் வேட்பு மனுதாக்கல்

வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதலாவது வேட்பு மனுவினை பத்தரமுல்லே சீலரத்தினதேரர் தாக்கல் செய்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜனசெதபெரமுன தனது வேட்புமனுவினை இன்று வெள்ளிக்கிழமை (04) தாக்கல்செய்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது கட்சியின் தலைவர் சீலரத்தினதேரர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

ஈரான் ஜனாதிபதிக்காக ஐ.நாவில் மெளன அஞ்சலி – இலங்கை, இந்தியாவில் துக்க தினம்

ரிஷாட் மீது வழக்குத் தொடருங்கள் இல்லையென்றால் விடுவியுங்கள் – ரணில்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு