அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – இதுவரை 122 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

அதன்படி, பொதுத் தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து 12 வேட்பாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 05 வேட்பாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும், கண்டி மாவட்டத்திலிருந்து 02 வேட்பாளர்களும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும், காலி மாவட்டத்திலிருந்து 01 வேட்பாளரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும் , அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 05 வேட்பாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 15 வேட்பாளர்களும், வன்னி மாவட்டத்திலிருந்து 08 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 15 வேட்பாளர்களும், திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து 11 வேட்பாளர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 12 வேட்பாளர்களும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 02 வேட்பாளர்களும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 06 வேட்பாளர்களும் , அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து 04 வேட்பாளர்களும் , பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 1 வேட்பாளரும் , பதுளை மாவட்டத்திலிருந்து 02 வேட்பாளர்களும் , மொனராகலை மாவட்டத்திலிருந்து 03 வேட்பாளர்களும் , இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 03 வேட்பாளர்களும் , கேகாலை மாவட்டத்திலிருந்து 03 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Related posts

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி அதிகரிப்பு

கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த கபில நாட்டில் இல்லை