அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – நவீன் திஸாநாயக்க

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவருடைய எக்ஸ் வலைதளத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விக்கிரமசிங்கவின் 2.2 மில்லியன் வாக்குகளில் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிதக்கும் வாக்குகளே கிடைத்திருந்தன. பொதுஜன பெரமுனவின் வாக்குகள் குறைவாகவே இருந்தது.

நான் 2000 ஆம் ஆண்டு முதல் 4 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மையக் கொள்கைகளுக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன் (இந்தக் கொள்கைகளால் உண்மையான பொருளாதார மற்றும் சமூக செழிப்பை அடைய முடியும் என நான் நம்புகிறேன்).

நான் ஊழல் வாதிகளுடன் தொடர்பு கொள்ள மாட்டேன், காமினி திசாநாயக்க அறக்கட்டளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறக்கட்டளை மற்றும் மகாவலி கலாச்சார நிதியம் ஆகியவற்றில் தொடர்ந்தும் பணியாற்றுவேன்.

ஒரு வழக்கறிஞராக எனது பணியின் மூலம் சமூக மற்றும் சட்ட அநீதிக்கு எதிராக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, பொதுத் தேர்தல் முடிவு எங்கள் தாய் மண்ணுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில் கட்டணம் அதிகரிப்பு

கனடா கொலை சம்பவம்: தவறுகளை ஏற்றுக்கொண்ட பொலிஸ் தரப்பு

திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் தயார்.