அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் இருந்து விலகிய அஜித் மான்னப்பெரும

கம்பஹா மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் தனது பெயர் உள்ளடங்கியுள்ள போதிலும் இவ்வருட பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட ஆசன அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமையினால் இந்த தீர்மானம் எடுத்ததாக ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் குறிப்பிட்டார்.

“இந்தத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் நான் வேட்பாளராக உள்ளேன்.

அத்துடன், 20 வருடங்களாக கம்பஹா தொகுதி அமைப்பாளராக கடமையாற்றி வருகின்றேன்.

ஆனால் இம்முறை என்னை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக நியமித்தாலும், வாக்கு கேட்பதைத் தவிர்க்க எண்ணினேன்.

நான் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை, எனவே அந்த வாக்கை எனக்காக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவால் நான் விரக்தியடைந்துள்ளேன்.

வேட்புமனுவில் கையொப்பமிட்டு 24 மணித்தியாலங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவிடம் பணியாற்றிய ஒருவருக்கு கம்பஹா தொகுதியின் ஆசன அமைப்பாளர் பதவி இரகசியமாக வழங்கப்பட்டது. இது மிகவும் வெறுப்பாக உள்ளது” என்றார்.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

கொழும்பு – சங்கராஜாமாவத்தையில் நீதி அமைச்சிற்கு முன்பாக சோசலிச இளைஞர்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

சஜித் தலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு