அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலின் பின் கட்சியில் மாற்றம் – நாமல்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கட்சியில் சில மாற்றங்களைச் செய்வோம். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கிராம மட்டம், கிராம சேவகர் மற்றும் 36,000 கிராமங்களை மையப்படுத்தி கட்சியை மீளமைக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேவேளை சவால்களுக்கு முகங்கொடுத்து கட்சியை கட்டியெழுப்ப போவதாக நேற்று (06) கேகாலையில் நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

கேகாலை ஹெஷானி ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கேகாலை மாவட்டத்தை வழிநடத்திய இந்த அணியைப் போலவே நாமும் அந்த சவாலை எதிர்கொண்டோம்.

தனிப்பட்ட காரணங்கள், தலைவர்களுடனான முரண்பாடு அல்லது கொள்கை காரணங்களால் எங்களை விட்டு விலகியவர்கள் அநேகர். அவர்களை நாம் கட்சியில் மீண்டும் இணைத்து கொள்ள வேண்டும்.

வாக்களிக்காதவர்கள் நிறை பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றித்தவர்கள். அவர்களுடனும் நாம் பேச வேண்டும்

வேறொரு அரசியல் கட்சியின் நபரின் நடத்தை அல்லது குணாதிசயங்கள் அல்லது அரசியல் செயல்பாடுகளை விமர்சிக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சில சமயங்களில் தற்போதைய அரசாங்கத்தை சிலர் கேலி செய்யும் விடயங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒவ்வொரு அரசாங்கத்தின் நடைமுறைகள் வேறுபட்டவையாகும். நாம் அவர்களை மதிக்க வேண்டும், ஆனால் அது நமது நடைமுறையாக இருக்காது.

இது அவர்களின் நடைமுறை மற்றும் ஆட்சி செய்யும் முறை. அவர்கள் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவர்களின் ஆட்சிப் பணியைத் தொடர நாமும் அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

ஆனால் ஒரு கட்சி என்ற வகையில் எங்களுக்கான அரசியல் கோட்பாடுகள் உள்ளன. அவர்கள் நாம் பாதுகாக்க வேண்டும். என தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

உர இறக்குமதிக்கு 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அமைச்சரவை அனுமதி

ஒன்பதாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு