உள்நாடு

பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை நியமனம்

(UTVNEWS | COLOMBO) – கோப் குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட குழுக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பங்களிப்புடனான பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை சபையில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்தத் தெரிவுக்குழுவானது பாராளுமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட 17 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும்.

இந்த 17 உறுப்பினர்களும் 8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத் தொடருக்கான தெரிவுக்குழு உறுப்பினர்களாகச் செயற்படுவர்.

சமல் ராஜபக்ஸ, நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த சமரசிங்க, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, ரோஹித்த அபேகுணவர்த்தன, லஷ்மன் கிரியல்ல, ஜோன் அமரதுங்க, விஜித ஹேரத், ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், நிரோஷன் பெரேரா, மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்தத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

Related posts

அரச நிறுவனங்கள் ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற வேண்டும் – ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத்

editor

இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

முட்டைக்கு மீண்டும் தட்டுப்பாடு !