சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக இன்றைய தினம் முன்னிலையாகவுள்ளார்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சிமளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய கடந்த புதன்கிழமை (26)  முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் வருகைத்தந்திருந்தார்.

இருந்தபோதும் அன்றைய தினம் அவரிடம் சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை அவரிடம் விசாரணை நடத்தாமல் ஒத்தி வைப்பதாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அதன்படி இன்றைய தினம் 02 மணிக்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

 

Related posts

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பேருந்தும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து

எதிர்வரும் 19ஆம் திகதி வரைக்கும் காலக்கெடு – பெப்ரல்