பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
குழுக்களின் பிரதித் தவிசாளரான ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில் கௌரவ விஜித ஹேரத் மற்றும் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக சபாநாயர் அறிவித்தார்.
அத்துடன், இந்த அறிக்கையானது, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களினால் அவர்களது பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் பற்றியும் சபாநாயர் அறிவித்தல் மேற்கொண்டார்.
அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களினால் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அடிக்கடி தனக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ததன் பின்னர், அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்காக, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அக்கோரிக்கைகள் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் சபையில் அறிவித்தார்.