அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பதிவு இன்று முதல்

10 வது பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் இணையவழி பதிவு இன்று (17ம் திகதி) முதல் வரும் 20ம் திகதி வரை நடைபெற உள்ளது.

குறித்த நாட்களில் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தும் பதிவு செய்ய முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் பின்னர், தேர்தல் ஆணைக்குழு குறித்த பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிட அரசு அச்சகத்திற்கு அனுப்பவுள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானி மூலம் நேற்று (16) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஷானி தொடர்ந்தும் விளக்கமறியலில்

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – நால்வர் காயம்

editor

கொழும்பில் அதிகளவானவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்