சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினரின் மகன் உள்ளிட்ட அறுவருக்கு பிணை

(UTV|COLOMBO) பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு விபத்திற்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் நேற்று பிணை வழங்கப்பட்டு 06 பேரும் இன்று(26) விடுதலை செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 7 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போது பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாத காரணத்தால் 06 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பிணை நிபந்தனையை பூர்த்தி செய்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 06 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உட்பட ஏழு சந்தேகநபர்களுக்கும் 5 இலட்சம் ரூபாவான இரண்டு சரீர பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

பெரும்பாலான பிரதேசங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழை…

‘வீழ்ச்சியடைந்த நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்’ – மக்கள் சபை இன்று

சஹ்ரான் ஹசீமுடன் நுவரெலிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றுமோர் நபர் கைது