உள்நாடு

பாராளுமன்ற அமர்வு | Parliament LIVE – 2023.05.23

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற அமர்வு இன்று (23) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை,

(i) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு,
(ii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை,
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,
(iv) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்,
(v) புகையிலை வரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,
(vi) முத்திரைத் தீர்வைச் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,
(vii) இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி மற்றும்
(viii) 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன்பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எனது உள்ளம் தூமையாது உலமாக்கள் முன் நிலையில் ரிஷாட் பதியுதீன்

editor

ஞாயிறன்று 9 மணித்தியால நீர் விநியோகம் தடை

சனத் நிஷாந்தவிற்கு பிடியாணை