உள்நாடு

பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு

(UTV | கொழும்பு) – கடந்த 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

ஆளும், எதிர்கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார உரையாற்றிய போது, அதற்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டிருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், ஆளும் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்குவதற்கும் முயற்சித்துள்ளதாக அந்த கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்.

Related posts

தொடர்ந்து முன்னெடுக்கப்படும் ஆர்பாட்டம்

லண்டனிலிருந்து கட்டுநாயக்க வந்தடைந்த விசேட விமானம்

வினாத்தாள் வெளியான சம்பவம் – மற்றொருவர் கைது!