சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று (20) 1 மணியளவில் கூடுகிறது

(UTV|COLOMBO) சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று (20) 1 மணியளவில் கூடவுள்ளது.

பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் நண்பகல் 12 மணியளவில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஏற்றுமதி கட்டளைச் சட்டத்தின் இரண்டு கோவைவிதிகள் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இன்று பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றும் சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

எதிர்வரும் 25 ஆம் திகதி வாக்காளர் பெயர் பட்டியலின் இறுதி பணிகள் நிறைவு…

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம்