சூடான செய்திகள் 1

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க பிரதமருக்கு அழைப்பு

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முனனிலையில் சாட்சியமளிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் 6ஆம் திகதி அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 6ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் எதிர்வரும் 31 ஆம் திகதி கூடவுள்ளது.

அன்றைய தினம் குறித்த தெரிவுக்குழுவில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கபில வைத்தியரத்ன சாட்சி வழங்கவுள்ளதாக குழுவின் உறுப்பினர் நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து ஒழுங்கு

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை

போதை மாத்திரைகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் கைது