உள்நாடு

பாராளுமன்றத்தை ஒத்திவைக்க ஜனாதிபதி ஆலோசனை!

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டவுடன், சபையின் முன் நிலுவையில் உள்ள அலுவல்கள் காலாவதியாகிவிடும். பாராளுமன்றம், ஜனாதிபதியால் கூட்டப்பட்டவுடன், அவற்றை மீண்டும் தொடங்க வேண்டும்.

ஜனாதிபதி அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைக்கலாம். ஒத்திவைப்பு அறிவிக்கும் பிரகடனத்தில், பேரவை கூட்டுவதற்கான புதிய திகதியை அறிவிக்க வேண்டும். ஒத்திவைப்பு முடிவில், பாராளுமன்றத்தின் புதிய அமர்வு தொடங்கும். இது, ஜனாதிபதியால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும். அரசியலமைப்பின் 33 ஆவது பிரிவின் பத்தி (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி அரசாங்க கொள்கை அறிக்கையை வெளியிட அரசியலமைப்பின் கீழ் அவருக்கு அதிகாரம் உள்ளது.

ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) மற்றும் பொதுக் கணக்குகளுக்கான குழு (கோபா) உள்ளிட்ட குழுக்கள் செயல்படுவதை நிறுத்துகின்றன. குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள தற்போதைய தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவுக்கு பதிலாக புதிய கோப் குழுவின் தலைவரை நியமிப்பதற்கு வழிவகை செய்வதே இந்த ஒத்திவைப்பு என உள் வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. கோப் தலைவரான பேராசிரியர் பண்டார, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு சாதகமான வகையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தமிழ் கூட்டமைப்பை பற்றி பேச முன்னர் ஜனநாயக சிந்தனைக்கு வர வேண்டும் – கலிலூர் ரஹ்மான்.

மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளை பாராட்டுகிறேன்

நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன