அரசியல்உள்நாடு

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு

தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கு சட்டமூலம் ஒன்றை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வருவதாகவும், ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“சில விடயங்களை நாங்கள் இப்போதுதான் தெரிந்து கொள்கிறோம். நான் ஜனாதிபதியான பிறகு, பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததற்காக எனக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது.

அதாவது, ஜனாதிபதி சம்பளத்திற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினரின் ஓய்வூதியமும் கிடைக்கிறது. நான் இன்று கடிதம் ஒன்றை கொடுத்தேன், எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் வேண்டாம் என்று.

இந்த நாட்டை சரி செய்ய ஆரம்பிக்க வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு அப்படி ஒரு ஓய்வூதியம் கிடைக்கும் என்று தெரியாது, பின்னர்தான் அது கிடைப்பது தெரியவந்தது. அதனால், பாராளுமன்றத்திற்கும் கடிதம் ஒன்றை கொடுத்தேன், எனக்கு ஓய்வூதியம் வேண்டாம் என்று.

அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராகும்போது, பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமும் கிடைக்கிறது, அமைச்சர் சம்பளமும் கிடைக்கிறது. நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்தோம், அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை மட்டுமே பெறுவார்கள்.

ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்துடன் அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு கிடைக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தின் இருந்து எரிபொருள் கொடுப்பனவையும் நீக்கி, நாங்கள் அதை வழங்கவுள்ளோம்.

அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் நீக்குகிறோம். ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தையும் திருத்துவோம்.” என்றார்.

Related posts

புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 39 பேருக்கு கொரோனா உறுதி

குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்துவதற்கான திட்டம்

editor