அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் உணவுக்கான விலைகள் அதிகரிப்பு

பாராளுமன்றத்தில் உணவுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளாந்தம் வசூலிக்கப்படும் தொகையை 2,000 ரூபாவாக அதிகரித்த பாராளுமன்ற சபைக் குழு இன்று (23) முடிவு செய்துள்ளது.

புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, பாராளுமன்ற உணவகத்தில் காலை உணவின் விலை 600 ரூபாவாகவும், மதிய உணவு 1,200 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கோப்பை தேநீரின் விலை 200 ரூபாவாகும்.

இந்த புதிய விலைகள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

உலகக்கிண்ண தோல்வி குறித்து குசல் தெரிவித்த கருத்து!

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார் – முன்னாள் அமைச்சர் நிமல் சிரிபால

editor

ஜனாதிபதி ரணிலை சந்தித்த அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா

editor