உள்நாடு

பாராளுமன்றத்தில் இன்று முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

(UTV|கொழும்பு) – நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி ஆராய்ச்சி வலையமைப்பு ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்திற்கும், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்க மற்றும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழவின் தலைவர் பேராசிரியர் எஸ் சம்பத் அமரதுங்க ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்த உடன்படிக்கை நாளை பிற்பகல் கைச்சாத்திடப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 3721 பேர் விடுவிப்பு

ரிஷாதின் விடுதலைக்கு கொழும்பிலும் ஆர்ப்பாட்டம் [VIDEO]

நிலக்கரிக்கு கேள்வி மனுக்கோரல்