உள்நாடு

பாராளுமன்றக் கலைப்பிற்கு இன்னும் 54 நாட்கள் – டலஸ்

(UTV|MATARA) – பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் இன்னும் 54 நாட்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்க உள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதன்படி, மார்ச் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு குறித்த சட்டரீதியான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ளதாகவும் மாத்தறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 110 நாட்களில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் மாத்தறையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலைப் போன்று எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இன்று விசேட விவாதம்

விஜயதாச ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு

editor

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமனம்

editor