உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று(12) பிற்பகல் 3 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது , ரஞ்சன் ராமநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குரல் பதிவுகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளுக்கான ஒழுங்குப்பத்திரத்தை தயாரிப்பது தொடர்பில், இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மீண்டும் முச்சக்கர வண்டிகளது கட்டணங்கள் உயரும் சாத்தியம்

தெமடகொடை சம்பவம் – கைதான கொழும்பு நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ விளக்கமறியலில்

லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்