கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக உரோம் நகரிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பிரார்த்தனை கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார்.
இருப்பினும் தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்தே பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.