உள்நாடு

பாத்திமா முனவ்வராவுடைய ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

(UTV | கொழும்பு) –    கம்பளை, கெலிஓயாவில் கொலை செய்யப்பட்ட 22 வயதுடைய பாத்திமா முனவ்வராவுடைய ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது .குறித்த பெண்ணின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து முறைப்படி குறித்த பெண்ணின் ஜனாசா இன்று மாலை 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும், யுவதியின் மரணத்திற்கான காரணம், பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்பே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பிலான மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம்

தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்