உள்நாடுசூடான செய்திகள் 1

பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ். விஐயம்

(UTVNEWS | கொவிட் – 19) -இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொண்டு இடர் வலயங்களாக அரசால் பிரகடனப்படுத்துள்ள 6 மாவட்டங்களின் ஒன்றான யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளனர்.

இன்று காலை 8.30 மணிக்கு விமானம் மூலம் பலாலிக்கு சென்ற அவருடன் விமானப் படைத் தளபதி  எயார் மார்சல் சுமங்கல டயஸூம் விஜயம் செய்துள்ளார்.

பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தில் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் ஆரம்பமான கூட்டத்தில் முப்படைகளின் கட்டளைத் தளபதிகள், வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷ குட்டுவதற்கு தகுதியானவர்

முதற் சுற்றில் 34818 பேருக்கு நியமனக் கடிதங்கள்

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்