வகைப்படுத்தப்படாத

பாதுகாப்பு அமைச்சில் புது வருட நிகழ்வுகள்

(UDHAYAM, COLOMBO) – தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலைமையில் விஷேட நிகழ்வு இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மங்கள விளக்கினை ஏற்றி வைத்து பாதுகாப்பு செயலாளர் உரையாற்றுகையில் ,மலர்ந்துள்ள இந்த புதுவருடம் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்த்துக்களை தெரிவித்தார்.

இந்த தருணத்தில் மீதொட்டமுல்ல பகுதியில் இடம்பெற்ற துக்கரமான நிகழ்வினையும் நினைவுக்கு கொண்டு வந்ததுடன். எதிர்வரும் காலங்களில் எமது மக்கள் மத்தியில் ஐக்கியம் மிகவும் அவசியம் என இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி , கடற்படைத்தளபதி, அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அமைச்சின் சிவில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Finance Ministry says no to Tissa’s daughter’s appointment

இன்று உலக இசை தினம்

ஜோசப் ஜாக்சன் மரணம்