சூடான செய்திகள் 1

பாதுகாப்புநிலையை தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்புப் பேரவை நேற்று இரவு கூடியது.

நாட்டின் பாதுகாப்புநிலை தொடர்பில் இதன்போது முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் அமைதி நிலையைத் தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

உயர்நீதிமன்ற ஆலோசனையைப் பெறத்தேவையில்லை

புகையிரத சேவைகளில் தாமதம்…

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி