உள்நாடு

‘பாதுகாப்பான நாடு – சுபீட்சமிக்க நாடு’ என்ற தொனிப்பொருளில் 72 ஆவது தேசிய தின வைபவம்

(UTV|COLOMBO) – பாதுகாப்பான நாடு, சுபீட்சமிக்க நாடு என்ற தொனிப்பொருளில் 72 ஆவது தேசிய தின வைபவத்தை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய தின வைபவக் கொண்டாட்டம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பாதுகாப்பான நாடு, சுபீட்சம் மிக்க நாடு என்ற தொனிப்பொருளில் தேசிய தின வைபவத்தை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் வழிகாட்டலில் இம்முறை தேசிய தின வைபவம் சிறப்பான முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது.

கடந்த வருடங்களிலும் பார்க்க இம்முறை தேசிய தின ஊர்வலத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை 30 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது.

விசேடமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கொண்டாட்டம் இடம்பெறும் பிரதேசத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், வாகன போக்குவரத்தை முன்னெடுப்பதற்கும் பிரதமர் உரிய பகுதியினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அமைச்சரவை உப குழு அங்கத்தவர்கள், அமைச்சின் செயலாளர்கள், முப்படையினர், பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

Related posts

நாடு திரும்பும் மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள்

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம்

கல்வி அமைச்சரின் கலாநிதியை தூக்கிய மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ்