வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட பிரதேச கழிவுகளை அகற்ற முறையான வேலைத்திட்டம் –ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கழிவுகளை அகற்றுவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தல் தொடர்பாக இன்று (06) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

கழிவு முகாமைத்துவம் தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கழிவு முகாமைத்துவ செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளிடம் விசாரித்தார்.

குறித்த செயற்திட்டங்களில் அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

மேலும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை குறைத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் கழிவுகளை வகைப்படுத்துதல் தொடர்பாக உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தல் போன்றே மக்களை தெளிவூட்டும் செயற்திட்டங்களின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தினார்.

அத்துடன் பாடசாலை மாணவர்களை தெளிவூட்டுவதற்காக கல்வி அமைச்சின் ஊடாக விசேட செயற்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் , கழிவு முகாமைத்துவம் தொடர்பாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் உள்ளுராட்சி செயலாளர்களை தெளிவூட்டுதல் , முன்னேற்றத்தினை அதிகரித்தல் தொடர்பான செயலமர்வை நடத்துவதற்கு உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான மங்கள சமரவீர ,காமினி ஜயவிக்கிரம பெரேரா ,அநுர பிரியதர்ஷன யாப்பா, பைசர் முஸ்தபா, கயந்த கருணாதிலக்க ,சாகல ரத்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரும் ,அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறையின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related posts

Sri Lanka, West Indies fined for slow over rate

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

காலநிலையில் திடீர் மாற்றம்!! பொதுமக்களே அவதானம்!!!