சூடான செய்திகள் 1

பாதாள உலகம் ஏன் தலைதூக்குகிறது?

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பயங்கரவாதத்தையும், பாதாள உலக நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், தற்பொழுது இவை மீண்டும் தலைதூக்கி வருவதாகவும், அரசாங்கத்தின் இயலாமையே இவை காட்டுவதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

எமது காலத்தில் இவ்வாறான ஒரு நிலைமை காணப்படவில்லை. இன்று இந்த நிலைமைக்கு பிரதான காரணம் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடக் கூடியவர்கள் அனைவரையும் இந்த அரசாங்கம் சிறையில் போட்டுள்ளமை ஆகும்.

சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் முக்கிய உறுப்பினர்கள், புலனாய்வு அதிகாரிகள், இராணுவத்தினர் என போதைப் பொருள் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடக் கூடியவர்கள் இன்று சிறையில் உள்ளனர். இதனால், போதைப் பொருள் வியாபாரம் தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றது எனவும் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது டிசம்பர் 03ம் திகதி ஆரம்பம்

பேராயர் ஜனாதிபதியை காண்பதே சிறந்தது -தயாசிறி