அரசியல்உள்நாடு

பாதாள உலகத்துக்கு கீழ்படிந்த நாடு இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

இன்று சமூகம் குரூரமான கொலை கலாசாரத்திற்கும், பாதாள உலகக் குழுக்களுக்கும் இரையாக்கப்பட்டுள்ளன. சட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரியவில்லை.

நாட்டில் சட்டம் அமுலில் இல்லை. கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரைக் கூட இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போதைய அரசாங்கத்தின் புலனாய்வுத் துறையின் இயலுமை எங்ஙகனம் என்பதை இவ்வாறானதொரு சூழ்நிலையை வைத்து ஊகிக்க முடிகிறது. நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய சந்தேகநபர் இது வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக மக்களின் உயிர் பாதுகாப்புடன் தேசிய பாதுகாப்பும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது குறித்து பேசும் போதும், கேள்வி எழுப்பும் போதும், தேசிய பாதுகாப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கம் கூறிவருகிறது. ஆனால் அண்மையில் தெவிநுவர பிரதேசத்தில் கூட இரட்டைக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலைக் கும்பல்கள் எங்கும் பரவி மக்கள் அச்சமின்றி, சந்தேகமின்றி வாழும் வாய்ப்பை இழந்துள்ளனர். வளமான நாடு அழகான வாழ்க்கையை உருவாக்குவோம் என்று கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த திசைகாட்டி அரசாங்கம், இன்று வாழ முடியாத நாட்டை உருவாக்கி, பாதாள உலகத்திற்கு கீழ்படிந்த ஓர் வாழ்க்கையை கட்டியெழுப்பியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று இன்று (24) அநுராதபுரம் நகரில் இடம்பெற்றது. இதல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயிகளின் நலன் காப்பது ஆட்சியாளரின் பொறுப்பாகும்.

விவசாயம் பரவலாக நடைபெறும் நமது நாட்டில் விவசாயத்தை வலுப்படுத்துவதும், விவசாயத்தின் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அதிக பங்களிப்பை பெற்றுத் தருவதும் அரசாங்கத்தை கைப்பற்றும் அனைவரின் நோக்கமாக இருந்தாலும், விவசாயிகளின் அபிலாஷைகளையும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

விவசாயிக்கு உரிய நேரத்தில் உர மானியம் கூட கிடைக்கவில்லை. யானை – மனித மோதலால் ஏற்பட்ட சேதங்களுக்கும் இன்னும் இழப்பீடு கிடைத்தபாடில்லை. விவசாய உபகரணங்களின் விலையேற்றம் காரணமாகவும் பாரிய பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

கிடைத்த இழப்பீடு கூட போதாது, இந்த பிரச்சினைகளுக்கு நாட்டு மக்கள் விடை தேடும் போது, ​​விவசாயிக்கு வழங்க வேண்டிய சேவையை சரியாக நிறைவேறவில்லை என்றே தோன்றுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நெல்லுக்கான உத்தரவாத விலை போதுமானதாக இல்லை.

நெல்லுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலை போதும் என அரசு முடிவு செய்தாலும், பயிர் சேதம், யானை-மனித மோதல், அனர்த்தம், பல்வேறு வானிலை மாற்றம், காலநிலை மாற்றங்கள் போன்றவற்றால் ஏற்படும் பயிர் இழப்பு கருத்தில் கொள்ளப்படவில்லை. உர விலையைப் பார்க்கும்போது, ​​நெல்லுக்கான உத்தரவாத விலையில் விவசாயிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை.

சாதாரண விவசாயிகளை நசுக்கி அரிசி ஆலை உரிமையாளர்களின் தேவைக்கு ஏற்ப இந்த உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரிசியை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று கூறி அதிகாரத்துக்கு வந்தவர்கள், வந்த கனமே அரிசியை இறக்குமதி செய்தனர்.

அரிசியில் தன்னிறைவு பெற்ற நாட்டை, இறக்குமதி செய்யாமல் ஏற்றுமதி செய்யும் யுகத்தை நாம் இங்கு உருவாக்க வேண்டும். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பேச்சுக்கும் நடவடிக்கைக்கும் இடையே முரண்பாடு காணப்படுகின்றன.

அவர்கள் சொல்வதைச் செய்தபாடில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

விமான நிலைய ஊழியர்களை மறு அறிவிப்பு வரும் வரை பணிக்கு வரவேண்டாம் என அறிவிப்பு

ரவி உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணைக்கு

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாவலர் தற்கொலை