உள்நாடு

பாண் விலை 100 ரூபாவை தாண்டும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக எதிர்காலத்தில் பாண் ஒன்றின் விலை 100 ரூபாவை தாண்டும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

போக்குவரத்துக்கான எரிபொருள் பற்றாக்குறையும் பேக்கரிக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் என்.கே. ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

வருங்காலத்தில் ஒரு பாண் ரூ.100க்கு நிச்சயம் தாவும் என நினைக்கிறேன். பாண் 100 ரூபாய் உயரும். 100க்குப் பதிலாக 150க்குப் போகாமல் நிறுத்தினால். இத்தனை பிரச்சினைகளால் ஒரு பாண் 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவது தவிர்க்க முடியாதது. 100க்கு குறைவாக விற்கப்பட்டால், அது பாண் அல்ல.

தற்போதைய நெருக்கடி காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் வீதித்தடைகளை அகற்று

பொதுத் தேர்தலிலும் சிலிண்டர் சின்னத்தில் போட்டி – நிமல் லான்சா

editor

எந்தவொரு அரசியல் அழுத்தங்களும் இனிமேல் இடம்பெறாது – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor