உள்நாடுவணிகம்

பாண் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) –  பாண் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்குமாறு அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கோதுமை மா விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்களில் ஒரு நிறுவனம், ஒரு கிலோ மாவின் விலையை 18 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தாங்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் தலையீடு செய்து 10 ரூபாவை விடவும் குறைந்த விலையிலாவது பாணின் விலையை அதிகரித்து, தமது பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

´சதொச´ ஊடாக சலுகை விலையில் உணவுப் பொருட்கள்

பேருவளை துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது

டயனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படுமா??