விளையாட்டு

பாண்டியா மற்றும் ராகுல் மீதான போட்டித் தடை நீக்கம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ (BCCI) தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர் கேஎல் ராகுல், வேகப்பந்து வீச்சு சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா இருவரும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக பிசிசிஐ அவர்களை இடைநீக்கம் செய்தது. இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக இந்தியா திரும்பினார்கள்.

இதனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

வீட்டினுள்ளே பயிற்சி – ரோஹித் கருத்து

ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை

இலங்கை அணி குறுகிய காலத்திற்குள் சரியான இலக்கை அடையும்