உள்நாடு

பாடசாலை முதலாம் தவணை நாளை ஆரம்பம்

(UTVNEWS | COLOMBO) -அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை நாளை ஆரம்பமாகவுள்ளது.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டு மையங்களாக பயன்படுத்தப்படும், 68 பாடசாலைகளை தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சை மதிப்பிட்டு மையங்களாக தொழிற்படும் 68 பாடசாலைகளும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி ஆரம்பமாகும்.

இந்நிலையில் ஜனவரி மாதம் 2ம் திகதி ஆரம்பமாகும் முதலாம் தவணையானது 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி நிறைவடையவுள்ளதோடு, இஸ்லாமிய பாடசாலைகள் ஜனவரி 2ம் திகதி ஆரம்பமாகி 2020ம் ஆண்டு ஏப்ரல் 6ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருக்கு விளக்கமறியல்

கடவுச்சீட்டு பெற இருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

ரஞ்சன் கைது [VIDEO]