உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள் 05 ஆம் திகதிக்குள்

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதிக்குள் விநியோகிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் வவுச்சர்களை விநியோகிக்கும் பணி இறுதி கட்டத்தில் இருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிவாரணத் திட்டத்தில் சேர்க்கப்படாத குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான ரூ.6,000 உதவித் தொகையை 5 ஆம் திகதிக்குள் செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் கீழ், சலுகைகளைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஜந்து இலட்சமாகும்.

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில், அஸ்வெசும நிவாரண சலுகைக்கு தகுதியற்ற அனைத்து மாணவர்களுக்கும் இத்தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை புத்தளம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் பதிவு

அரசாங்க அச்சக திணைக்கள ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இடைநிருத்தம்

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்