உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை

(UTV – கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 13 ம் திகதியிலிருந்து பாடசாலைகள் மூடப்பட்டமையால், பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியைப் பயன்படுத்தி உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படும் எதெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 12 இலட்சம் மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முட்டை, போஷாக்கு உணவு, அரிசி, நூடில்ஸ், பிஸ்கட், கடலை, கௌபி போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எச்சரிக்கை

உயர்தர பரீட்சை தேர்வின் நடைமுறைத் தேர்வுகளில் தோற்றத் தவறிய மாணவர்களுக்கான அறிவிப்பு