உள்நாடு

பாடசாலை மாணவர்களின் பைகளை அரசு சோதனை செய்யும்

(UTV | கொழும்பு) – ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக பாடசாலை மாணவர்களின் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்த அமைச்சர், கிலோ கணக்கில் ஹெரோயின் போதைப்பொருள் நாட்டிற்கு கொண்டு வரப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும், அவற்றை மிக நுணுக்கமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐஸ் போதைப் பொருட்களை கொண்டு செல்வது மிகவும் இலகுவானது எனவும், அவற்றை தடுப்பதற்கு எந்த சட்டமும் இல்லை எனவும் எமது ஜன பல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

Related posts

மாணவர்களுக்கான மதிய உணவு நிறுத்தம் ? பொய்யான செய்தி கல்வி அமைச்சு

editor

சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு சதி – இராதாகிருஷ்ணன்

editor

இன்றும் நாளையும் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்