(UTV|COLOMBO)-ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டிபன வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இசுறு சந்தீப எனும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
நேற்று (02) மாலை 4.20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.