உள்நாடுபிராந்தியம்

பாடசாலை பேருந்து கொள்வனவு திட்டத்திற்கு எட்டரை லட்சம் நிதியுதவி செய்த பழைய மாணவர்கள்

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் நீண்ட நாள் தேவையாக காணப்படும் பாடசாலை பேருந்திற்காக பாடசாலை நிர்வாகத்தினால் பேருந்து கொள்வனவிற்கான நிதி திரட்டும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இச் செயல் திட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 2003/2006 பழைய மாணவர் தொகுதியினர் 850,000.00 ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

இந்த நிதியை 2003/2006 தொகுதி மாணவர் குழாமின் பிரதிநிதிகள் அதிபர் காரியாலயத்தில் கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.ஜாபிர் அவர்களிடம் கையளித்தார்.

இதன் போது நிதியுதவி அளித்த அத்தொகுதி பழைய மாணவர்களுக்கு அதிபரினால் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.

மேற்படி செயற்திட்டத்திற்காக நிதியுதவி வழங்கிய 2003/2006 மாணவ தொகுதியினருக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் இதன்போது தெரிவித்தார்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

புதிய பதவிகளுக்கான உறுப்பினர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்

சாப்பிட்ட உணவில் கரப்பான் பூச்சி – ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

editor

லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக இன்று முறைப்பாடு