உள்நாடு

பாடசாலை நேரத்தில் மேலதிகமாக 01 மணி நேரம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 18, 2022 முதல் பாடசாலை நேரம் மேலதிக ஒரு மணிநேரத்தினால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் முதலாம் பாடசாலை தவணை தொடக்கம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை நேரங்களை நிறைவு செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, இடைக்கால விடுமுறைகள் உள்ளிட்ட பாடசாலை அட்டவணைகள் அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

இன்று ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி கூடுகிறது!!

IMF பிரதிநிதிகளை சந்திக்கின்றோம்- சஜித் அறிவிப்பு

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்.